Friday, December 26, 2025

தண்ணீர் டிராக்டரை திருடி சென்ற பீகார் வாலிபருக்கு அடி, உதை

திண்டுக்கல் பொன்னகரம் அரசு ஐடிஐ அருகில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தண்ணீர் டிராக்டர் பொன்னகரம் ஐடிஐ அருகே நிறுத்தி வைக்கபட்டு இருந்தது. இன்று காலை அந்த பகுதியில் பனியன் உடன் சுற்றி வந்த வாலிபர் ஒருவர் கேசவனுக்கு சொந்தமான டிராக்டரை திருடி கொண்டு நத்தம் சாலை வழியாக மக்கள் அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் டிராக்டரை விரட்டி சென்றனர் .அப்போது அந்த திருடன் சிறுமலை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து கைகளை கயிறுகளால் கட்டி தர்ம அடி கொடுத்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்த போது தண்ணீர் டிராக்டரை திருடியவர் பீகாரை சேர்ந்த அமலேஷ் யாதவ் என்பவர் என்பவர் தெரியவந்தது.

காயங்களுடன் இருந்த திருடனை பொதுமக்களிடமிருந்து போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் திருடிய வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

போலீசார் முதல் கட்ட விசாரணையில் திருடிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது என கூறப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணையை கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News