நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி வரும் நிலையில் தற்போது தண்ணீருடன் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த தண்ணீர் மாநாட்டை திருவையாறு தொகுதியில் நவம்பர் 15-ல் நடத்துகிறார். இதற்கிடையே தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்த சீமான் ஆயத்தமாகி வருகிறார்
