டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவிப்பு வரும் வரை செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லி லால் குய்லோ மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்படுவதாகவும் மற்ற மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
