எழும்பூர் – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில், மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, நவம்பர் 26, 27, 29 ஆகிய தேதிகளில், எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை புறப்பட்டு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கமான நேரத்தை விட 20 நிமிடம் தாமதமாக சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 10.50 மணிக்கு பெங்களூரு புறப்படும் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில், சுமார் 2 மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து, வருகிற 26-ந்தேதி இரவு 11 மணிக்கு ஈரோடு புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், இரண்டு மணி நேரம் 40 நிமிடம் தாமதாமக மறுநாள் அதிகாலை 1.40 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
