ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த சூழலில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஹால்டிக்கெட்டை பதிவிறக்க கடவுச்சொல்லை மறந்துவிட்டு, அதனை மாற்ற செல்போன் எண்ணுக்கு OTP அனுப்ப முயற்சித்தும், குறுஞ்செய்தி வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பலர் புகார் அனுப்பியுள்ளனர்.
