தமிழ்நாட்டில் குடும்பங்களுடன் ஒன்றாக இணைந்து கொண்டாடும் பண்டிகைகள் ஏராளமாக உள்ளது. இந்த இந்த பண்டிகைகளை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
அப்படி ஒன்று தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதற்காக ஊருக்கு செல்லும் மக்கள் ரயில் டிக்கெட் புக் செய்ய விரும்புவார்கள் இன்று முதல் தயாராக இருக்க வேண்டும்.
ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
ஆகையால், பொங்கல் சீசனுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று { நவம்பர் 12 } தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, ஜனவரி 11 முதல் 18 வரை பயணம் செய்ய விரும்புவோர், நவம்பர் 12 முதல் 19 வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு பயணத் தேதிக்கும் அதற்கேற்ற முன்பதிவு தேதி உள்ளது. இது பயணத்திற்கு சரியாக 60 நாட்களுக்கு முன்பே திறக்கப்படும். தெற்கு ரயில்வே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்து திரும்புபவர்களுக்கு ஜனவரி 18ஆம் தேதிவரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. 18ஆம் தேதி பயணம் மேற்கொள்வதற்கான முன்பதிவு, வரும் 19-ஆம் தேதி தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
