இந்திய அளவில் தவிர்க்க முடியாத கலை இயக்குநராக இருப்பவர் தோட்டா தரணி. நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பின் மூலம் திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 13ம் தேதி சென்னையிலுள்ள பிரான்ஸ் அலையன்ஸ் வளாகத்தில் பிரான்ஸ் தூதர் இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்கவுள்ளார்.
பிரான்ஸின் இந்த செவாலியே விருதை தமிழில் நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல் ஹாசன் உள்ளிட்டோர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
