Thursday, December 25, 2025

முற்புதர் காட்டுக்குள் கிடந்த பச்சிளம் குழந்தை!! வீசி சென்ற கொடூரம்..

அமரசிம்மேந்திரபுரம் அருகே ஆத்தங்காடு அணைக்கட்டு பகுதியில் கோரை முற்புதற்காட்டுக்குள் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை மீட்பு .

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அமரசிம்மேந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்தங்காடு அணைக்கட்டு பகுதியில் கோரை முற்புதர் காட்டுக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்போது , அதன் அருகே வயல்வெளியில் வேலை பார்த்திருந்த பெண்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

உடனே நாகுடி காவல் துறைக்கு மற்றும் அமரசிம்மேந்திரபுரம் கிராம நிர்வாக அலுவலர் தங்க நிலா சம்பவ இடத்திற்க்கு சென்றுள்ளார். பின்பு குழந்தையை மீட்ட ,கிராம நிர்வாக அலுவலர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறார்

பிறந்த ஒரு மணி நேரத்தில் குழந்தை வீசி சென்ற தாய் யாரென்று நாகுடி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News