ரவி தேஜாவின் சமீபத்திய படங்கள் சரியாக ஓடாத நிலையில் சமீபத்தில் வெளியான மாஸ் ஜதாரா படமும் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.
இந்நிலையில் நடிகர் ரவி தேஜா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது அவர் அடுத்து நடிக்கப்போகும் படமான ’பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ படத்திற்காக அவர் சம்பளம் வாங்காமல் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் லாபத்தில் பங்கு எடுத்துக்கொள்வார் என்ற மற்றொரு பேச்சும் உள்ளது. இருப்பினும் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
