சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடி கிராமத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர் அய்யாபுரம் போலீசார் விசாரணை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடி கிராமத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசி சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தினர் காலையில் சென்றபோது கிணற்றில் பச்சிளம் குழந்தை மிதந்ததை அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து குழந்தையை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குழந்தையை கிணற்றில் வீசிசென்ற மர்ம நபர் யார் எனவும், மேலும், பல்வேறு கோணங்களில் அய்யாபுரம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கிணற்றில் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
