அலர்ஜி என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், மகரந்தம், தூசிப் பூச்சிகள் அல்லது சில உணவுகள் போன்ற பொதுவாக பாதிப்பில்லாத பொருட்களுக்கு அதிகமாக எதிர்வினையாற்றும் ஒரு நிலையாகும். இந்த எதிர்வினையின் அறிகுறிகள் தும்மல், மூக்கு ஒழுகுதல், அரிப்பு மற்றும் சரும அழற்சி முதல் மூச்சுத் திணறல் வரை வேறுபடலாம் என்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்கட்டும், இந்த அலர்ஜி உங்களுக்கு இருந்தால் சில செடிகளை வீட்டில் வளர்க்காதீங்க என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். தற்போது, என்னென்ன செடிகள் என்று பார்க்கலாம்.
ஆப்பிரிக்கன் வயலட்
ஆப்பிரிக்கன் வயலட் ஒரு அழகான செடி. ஆனால் இதன் இலைகளில் தூசி படிவதும், மகரந்தமும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர்.
ரப்பர் செடி
அழகான தாவரங்களில் ஒன்று ரப்பர் செடி. ஆனால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இதில் லேடெக்ஸ் உள்ளது, இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கின்றனர்.
ஃபெர்ன்கள்
ஒவ்வாமை இருந்தால், வீட்டிற்குள் ஃபெர்ன்களை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனின் இலைகளில் தூசி படிவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
வீப்பிங் ஃபிக்
மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் வீட்டிற்குள் வீப்பிங் ஃபிக் செடியை வளர்க்கவே கூடாது நிபுணர்கள். இது வீட்டை அழகு படுத்துவதற்காகவும், பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கின்றனர்.
பர்பிள் பேஷன் செடி
இந்தச் செடியை வீட்டிற்குள் வளர்ப்பதைத் தவிர்க்கலாம். ஏனெனில் இதன் இலைகளில் தூசி படிவதற்கான அதிக வாய்ப்புள்ளது.
பூக்கும் செடிகள்
சில பூக்களில் மகரந்தம் இருக்கும். இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பூக்கும் செடிகளை வீட்டிற்குள் வளர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
இங்கிலீஷ் ஐவி
இந்தச் செடியில் ஃபால்கரினால் என்ற கலவை உள்ளது. இது சருமத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
உங்கள் பழக்கவழக்கத்தில் ஏதேனும் மாற்றத்தை கொண்டுவர நினைத்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடு மாற்றுவது மிக சிறந்தது. மேலும், இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே.
