Friday, December 26, 2025

மத்திய அரசின் மெத்தனமே காரணம்., டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு

டெல்லியில் நேற்று செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் முன்பு கார் ஒன்று நேற்று மாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சிகிச்சைப்பலனின்றி இறந்தனர். இதனால், டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய அரசின் மெத்தனமே காரணம் என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்தார்.

Related News

Latest News