போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
இதற்கிடையே கடந்த 28-ந்தேதி உடல் நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராக முடியவில்லை என்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கத்துறைக்கு தெரிவித்திருந்தார். இதனால் வரும் 11-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்த் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசரணை நடத்தி வருகின்றனர்.
