தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தவெக மாநில நிர்வாகிகள் புஷ்பவனம் குப்புசாமி, அர்ஜுனமூர்த்தி, விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் நேரடியாக மனுவை வழங்கியுள்ளனர்.
மனுவில் 10 விருப்ப சின்னங்களின் பட்டியலை தவெக சமர்ப்பித்துள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளதால், பொது சின்னம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
