‘தூங்கிவிட்டேனாம்’.., செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் முரட்டு தூக்கம் : புகைப்படம் வைரல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகை-யின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டு அசந்து தூங்கியதாக வெளியான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலாக வலம் வருகிறது.

இதனால், டிரம்பின் நிர்வாகம் மற்றும் பணி அவரது செயல்திறன் குறைகிறதா என்ற கேள்வி தற்போது பேசுபொருளாகி உள்ளது. எதிர்ப்பாளர்கள், ‘அவர் பணி நேரத்தில் தூங்குவது அவரது உடல்நிலை பற்றிய கவலைக்குரிய அறிகுறி’ என்று ஒரு பக்கம் கருத்துகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இவ்வாறு முன்னதாகவே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் டிரம்ப் தூங்கியதாக பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாத எரிசக்தி நிகழ்ச்சி, செப்டம்பர் மாதம் US Open போட்டி, மற்றும் கடந்த ஆண்டு ஹஷ் மணி வழக்கு விசாரணை உள்ளிட்ட பல நேரங்களில் அவர் தூங்கியதாக வீடியோக்களும் வெளிவந்துள்ளன.

மாறாக, டிரம்பின் நிர்வாக அதிகாரிகள் ‘அவர் எப்போதும் வேலை செய்கிறார்; அவர் எப்போது தூங்குகிறார் என்பதையும் நாங்கள் அறியவில்லை’ என்று கூறி, அவரின் செயல்திறனை பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்த வகை சம்பவங்கள் பொதுமக்களின் நம்பிக்கையையும், அதிபரின் திறனையும் குறித்து கேள்விகளை எழுப்ப வழிவகுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் தூங்கிய வீடியோ அவர் ஏதேனும் முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும்போது சர்ச்சையை கிளப்பிவிடும் நோக்கில் பரப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Related News

Latest News