ஆம்பூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில், அரசு டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில், லாக்கரில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் கடையின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டுள்ள நிலையில், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
