அம்பத்தூர் அருகே தவெக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி குப்பம் பகுதியில் தவெக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தவெக 90 வது வட்டக் கழக பொறுப்பாளர் பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் இந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொது மருத்துவம் மட்டும் இன்றி பல் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் ஆகியவற்றிற்கும் இந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
