டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறியதால் 10 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
