Friday, December 26, 2025

ரூ.20 ஆயிரம் லஞ்சம்., நைட்டிக்குள் மறைத்தபோது சிக்கிய பெண் வி.ஏ.ஓ

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம்புதூர் வி.ஏ.ஓ அலுவலகத்தில் அப்ப்குதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். அப்போது விண்ணப்பத்தை பெற்ற கிராம நிர்வாக அதிகார் முத்துலட்சுமி என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் செலவு ஆகும் என கேட்டுள்ளார்.

இதையடுத்து அப்பெண் பணம் தருகிறேன் என்று கூறிவிட்டு, நேராக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து முத்துலட்சிமியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட போலீசார் கிருஷ்ணனிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பினர்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்துலட்சுமியை கையும் களவுமாக பிடிக்க முயன்றனர். அப்போது முத்துலட்சுமி பணத்தை திடீரென தான் அணிந்திருந்த நைட்டிற்குள் வைத்து மறைக்க முயன்றார். இருப்பினும் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.

Related News

Latest News