நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் & சிந்த் வங்கி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சுமார் 1,800 கிளைகளுடனும் 25 மண்டல அலுவலகங்களுடன் இயங்கி வரும் மிகப்பெரிய வங்கியாக பஞ்சாப் சிந்த் வங்கி உள்ளது.
தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர் பதவிக்கு 30 பணியிடங்கள் நிரப்பப்படும்.
கல்வி தகுதி
- இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கபப்ட்ட் கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- எம்பிஏ (மார்க்கெட்டிங் அல்லது நிதி) முடித்தவர்களுக்கு முன்னுரிமை.
- கஸ்டமர் ரிலேஷன்ஷிப் / கிரெடிட் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
- இந்த அனுபவம் ரிசர்வ் வங்கியால் அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் மட்டுமே இருக்க வேண்டும்.
வயது வரம்பு
- வயது வரம்பை பொறுத்தவரை 01.11.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 25 வயதும் அதிகபட்சம் 33 வயதுக்கும் இடையில் வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அரசின் விதிகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படும்.
தேர்வு முறை மற்றும் கட்டணம்
- எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு.
- விண்ணப்பக் கட்டணம் ரூ.800.
- எஸ்சி/எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் ரூ.100 மட்டும்.
- விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே ஏற்கப்படும்.
விண்ணப்ப காலம்
- விண்ணப்ப தொடக்கம்: 05.11.2025
- விண்ணப்ப முடிவு: 26.11.2025
விண்ணப்பிக்க
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம்.
https://punjabandsind.bank.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும்.
