கேரளாவில் பள்ளி மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடல் பாட வைத்ததாக முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் எர்ணாகுளம்-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பள்ளி மாணவிகள் ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எர்ணாகுளம் வந்தே பாரத் தொடக்க விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடலை பாட வைத்தது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
வகுப்புவாத சித்தாந்தத்திற்கும், வெறுப்புணர்ச்சிக்கும் பெயர் பெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாடலை அரசு நிகழ்வில் பயன்படுத்துவது அரசியலமைப்பின் கோட்பாடுகளை மீறும் செயல் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை இயக்குனருக்கு அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரத்தில் தலையிட பினராயி விஜயனுக்கு உரிமை இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
