திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆம்னி பேருந்தின் குறுக்கே கையில் பாட்டிலுடன் திடீரென வந்து நின்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி வழியாக தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென கையில் பாட்டிலுடன் குறுக்கே வந்த இளைஞரை கண்ட ஓட்டுநர், சுதாரித்துகொண்டு பிரேக் போட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
