Friday, December 26, 2025

“யாருக்கு இந்த ஆயிரம் ரூபாய்?” – மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 10) ரூ. 767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது மகளிர் உரிமைத் தொகை குறித்துப் பேசிய முதல்வர், “மகளிருக்கு உரிமைத்தொகை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னபோது, அப்படியெல்லாம் தர முடியாது என்று, யார் சொன்னார்? தமிழ்நாட்டின் நிர்வாகத்தை பாழ்படுத்திய அதிமுக-வும் சொன்னார்கள். ஆனால், நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சரி செய்ததுமே உரிமைத்தொகையை வழங்க ஆரம்பித்தோம்!

இதுவரைக்கும் 27 மாதங்களில் 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு 27 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறோம். இந்தத் தொகையை வழங்க ஆரம்பிக்கும்போது என்னிடம் கேட்டார்கள்…..  “யாருக்கு இந்த ஆயிரம் ரூபாய்?” கிடைக்கும் என்று சட்டமன்றத்தில் கேட்டார்கள்! நான் சொன்னேன், “யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவையோ, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்” என்று நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் – தகுதியுள்ள எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும்.  நான் உறுதியோடு சொல்கிறேன் என கூறினார்.

Related News

Latest News