மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவின் வீட்டை ட்ரோன் மூலம் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தவ் தாக்கரேவின் வீட்டை ட்ரோன் மூலம் பாஜக அரசு உளவு பார்ப்பதாக அவரின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் வீட்டை ட்ரோன் மூலம் உளவு பார்த்தது வெட்கக்கேடான செயல். நாங்கள் வீடியோ பதிவு செய்யத் தொடங்கும் வரை ஜன்னலுக்கு சமமாகப் பறந்த ட்ரோன், பதிவு செய்வதைக் கண்டதும் மேலே சென்றுவிட்டது என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
