2026 ஆம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி (தை 1, வியாழக்கிழமை) வருகிறது. இந்நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 10) தொடங்கியுள்ளது.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நெல்லை, பொதிகை, சிலம்பு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்களில் டிக்கெட் முழுவதும் தீர்ந்துவிட்டது. பல ரயில்களில் டிக்கெட் காத்திருப்பு பட்டிய்லில் உள்ளன.
