Monday, January 26, 2026

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு : 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

பிரபல தொலைக்காட்சியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 2017 முதல் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்னர் பிக் பாஸ் 8வது சீசனிலிருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழரின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ளதாகவும், இளம் தலைமுறையின் மனநிலையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை மூலம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நடந்துவரும் பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் படப்பிடிப்பு தளத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். “பிக் பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்பதே அவர்களின் கோரிக்கை.

பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்ளும் இந்த போராட்டத்தில், “குடும்ப மதிப்புகளை காப்போம்”, “பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்க” என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Related News

Latest News