எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜனநாயகன்’. இந்த படம் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று திரைக்கு வர உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ‘தளபதி கச்சேரி’ என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ‘ஜனநாயகன்’ வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரிலீசுக்கு முன்பே வசூலை வாரி குவித்துள்ளது. குறிப்பாக படத்தின் ஓ.டி.டி. உரிமை மட்டும் ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ.115 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் வட அமெரிக்கா உரிமையை ரூ.24 கோடிக்கு வாங்கியுள்ளனர். இதன்மூலம் படம் ரிலீசுக்கு முன்பாகவே இதுவரை ரூ.260 கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கிறது.
