சென்னையில் இதுவரை 767 வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வீடுகளில் நாய்கள் வளர்ப்போர் தங்களது நாய்களுக்கு உடல்நலக்குறைவு, நோய் பாதிப்பு அல்லது நாயை பராமரிக்க முடியாவிட்டால் சாலையில் விட்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்க அனைத்து நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னையில் 7 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. 727 செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி அதன் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது என்றும் வருகின்ற 16 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் நாய்களுக்கு சிப் பொருத்தும் முகாம் நடைபெறும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
