வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பது ஏன் ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
வீடியோவில் பேசியிருக்கும் முதலமைச்சர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும், தேர்தல் சமயத்தில் அவசர அவசரமாக எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுவதை எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர் படிவங்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் குழப்பங்கள் இருப்பதாக கூறியிருக்கும் அவர், SIR சதி என்பதை உணர்ந்ததாலையே ஆரம்பத்தில் இருந்து எதிர்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் அதிகாரியாகவே இருந்தாலும், தேர்தல் பணி மேற்கொள்ளும் போது அவர்களுக்கு கட்டுப்பட்டுதான் செயல்படுவர் என்றும், ஒரு நாளைக்கு 30 படிவங்களே கொடுக்க முடியாத சூழலில், 30 லட்சம் படிவங்களை எப்படி கொடுக்க முடியும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
