இன்றைய காலத்தில் கிரெடிட் கார்டுகள் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களும் இவற்றை செயல்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்துவது நிதி நிலைமை பாதுகாப்பிற்கும் அவசியமாகும்.
கிரெடிட் கார்டு பில் தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டியது மிக முக்கியம். பில் தொகையைத் தவறவிட்டால் வங்கிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும். கிரெடிட் கார்டு பில் தொகையைச் செலுத்தாத பட்சத்தில் வங்கிகள் மூன்றாம் தரப்பு வசூல் முகவர்களை நியமிக்கலாம். இந்த முகவர்களின் அணுகுமுறை பெரும்பாலும் சரியில்லாமல் இருக்கும். அது உங்கள் சமூக மதிப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
வசூல் முகவர்களாலும் பணம் வசூலிக்க முடியவில்லை என்றால், வங்கிகள் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். இந்த முயற்சியும் தோல்வியடைந்தால் வங்கிகள் உங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
பில் செலுத்துவதில் தாமதம் வந்தால் அதிக வட்டி விதிக்கப்படும், கடன் சுமை பெருகும், கிரெடிட் ஸ்கோர் குறையும். இது நீண்ட காலத்தில் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சரியான நேரத்தில் பில் செலுத்துவது நிதி நிலையை பாதுகாக்கும்.
கிரெடிட் கார்டுகள் பல நன்மைகள் கொண்டவை. அவை பயண, கேஷ்பேக், ரிவார்டுகள் மற்றும் தள்ளுபடி வசதிகள் போன்றவை வழங்குகின்றன. வாட்டியில்லாத கால எல்லை உள்ளபோது பில் தொகையை முழுவதுமோ அல்லது சில தவணைகளாக இஎம்ஐ முறையில் செலுத்த கூடுதல் வசதி பெறலாம்.
