சென்னையில் செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று (நவம்பர் 6) நடைபெற்று வருகிறது.
நவம்பர் 9, 16, 23 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில், திருவிக நகர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
செல்லப் பிராணிகள் வளா்ப்போர் தங்களின் விவரங்களை செயலியில் பதிவிட்டு செல்லப் பிராணிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களையும் பதிவிட்டு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஆய்வுக்கு பிறகு உரிமம் வழங்கப்படும். அப்போது, மைக்ரோ சிப் பொருத்தப்படும். உரிமம் பெறாதவா்களுக்கு வரும் நவ. 24 -ஆம் தேதி முதல் அபராதமாக ரூ.5,000 விதிக்கப்படும்.
