புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 27-ம் தேதி 25 பேட்டரி பேருந்துகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இங்கு சுமார் 75 பேர் பணிபுரிந்து வருகின்றனர். புதுச்சேரியின் கிராமப்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
பேருந்துகள் இயக்க தொடங்கி 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில் ஊழியர்களுக்கு ஊதிய நிரந்தரம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, தமிழகத்தில் மின்சார பேருந்து ஊழியர்களுக்கு இணையான ஊதியம் எங்களுக்கும் வழங்க வேண்டும் எனக்கூறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மின்சார பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
