Monday, December 22, 2025

‘உனக்கென்னப்பா, நீ பைத்தியம்’ – டி.டி.வி தினகரனை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :

ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.

நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.

டிடிவி தினகரனுடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?

பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related News

Latest News