Monday, December 22, 2025

‘கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி’ – செங்கோட்டையன் பேட்டி

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு வழிவகை செய்த சசிகலாவை கொச்சையாக பேசினார்.

நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பா.ஜ.க.விற்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர்.

கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

Latest News