மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவு வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து மாவட்ட ஆட்சியர், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
