வேலூரை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அசோக்குமார், கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதி கஞ்சா விற்பனையாளர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த திருமலை என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை அடுத்து குற்றவாளி வேலுார் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
