சென்னையில் எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 3 ஆயிரத்து 718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என ஆயிரத்து 859 வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள் இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர் என்றும், படிவங்களைப் பூர்த்தி செய்ய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவுவார்கள் என்றும், வீடுகள் பூட்டியிருந்தாலும், அலுவலர்கள் 3 முறை வந்து, படிவங்களைக் கொடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், 16 தொகுதிகளும் இடம்பெற்றுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையமும் இயங்கி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
