Saturday, December 27, 2025

வங்கி ஊழியர்கள் இதை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

மும்பையில் நேற்று ஸ்டேட் வங்கியின் 12-வது பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான விதிமுறைகளை மாற்றியமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் வங்கி பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் உள்ளூரின் வட்டார மொழியை கற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.

ஒரு கிளையில் பணியமர்த்தப்படும் ஒவ்வொரு ஊழியரும் தனது வாடிக்கையாளரைப் புரிந்து கொள்வதற்கு, உள்ளூர் மொழியை பேசுவதையும் உறுதிசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் அந்த வங்கியின் கிளை மானேஜராவது வட்டார மொழி பேச வேண்டும் என கூறியுள்ளார்.

Related News

Latest News