பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசியதாவது :
“என்னைவிட்டு பிரிந்து ஒரு கும்பலை சேர்த்துக்கொண்டு கத்தி, அரிவாளை எல்லாம் வைத்திருக்கிறார். சேலம் மாவட்டச் செயலாளர் அருள் நல்லவேளையாக தப்பி பிழைத்தார். ஆனால், காரை அடித்து உடைத்துள்ளனர். துக்கம் விசாரிக்க சென்றவர்களை அடித்துள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உன்னை(அன்புமணி) அமைச்சர் ஆக்கினேன், மத்திய அமைச்சர், எம்.பி. என இறுதியில் கட்சியின் தலைவர் ஆக்கினேன். ஆனால் எல்லாம் வீணாகிவிட்டது, பெரிய தவறு செய்துவிட்டேன் என்று இப்போது நினைக்கிறேன்.
நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். நீ(அன்புமணி) ஒரு கட்சி ஆரம்பித்துக்கொள், உனக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை என்றால் நான் ஒரு பெயரைச் சொல்கிறேன்.
இனிமேல் எங்கேயாவது என்னுடைய கட்சியினர் மீது சுண்டுவிரல் பட்டாலும் அன்புமணியும் அவருடைய மனைவியும்தான் காரணம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
