ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கரூர் நெரிசல் சம்பவத்தில் நடிகர் விஜய் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், புதிய போஸ்டரை வெளியிட்டு ஜனநாயகன் படக்குழு ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது.
நடிகர் விஜய்யின் சினிமா கெரியரில் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என கே.வி.என். நிறுவனம் மீண்டும் உறுதிபட அறிவித்துள்ளது. மேலும், முழுக்க அரசியல் சார்ந்த படமாக இல்லாமல் பல ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் ஒரு படமாக ஜனநாயகன் இருக்குமாம். அதாவது, கிட்டத்தட்ட பத்து சண்டை காட்சிகள்வரை படத்தில் இருப்பதாகவும், வசனங்களில் அரசியல் டச் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன்பின்னர் அவர் முழு நேர அரசியலில் களமிறங்குகிறார்.
