டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரபல நிதி நிறுவனத்தின் பெயரில் மோசடி கும்பல் ஒரு போன் செய்துள்ளது. அவர்கள் அந்த பெண்ணின் கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட்ஸ் பயன்படுத்த உதவுவதாக கூறி, அனுப்பிய ஓடிபி குறியீட்டை கேட்டுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 11.95 லட்சம் டெபிட் ஆகியுள்ளது. அந்த பணம் பல வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் 5 பேரை கைது செய்தனர். மோசடி பணத்தை வைத்திருக்கும் கணக்குக்களும் முடக்கப்பட்டுள்ளன.
மோசடி குழுக்கள் வங்கி அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஓடிபிகளைப் பெற்று மோசடிகளில் ஈடுபடுகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு சைபர் குற்றப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
