Thursday, December 4, 2025

டாடா நிறுவனத்தின் அறிவிப்பால் இந்திய மகளிர் அணிக்கு ஜாக்பாட்

13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐ.சி.சி. சார்பில் ரூ. 39.78 கோடியும், பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதன் வரவிருக்கும் டாடா சியரா எஸ்யூவி- காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த மாடல் கார் நவம்பர் 25-ம் தேதிதான் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News