தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளைத் தற்போதே அரசியல் கட்சிகள் துவங்கியுள்ளன. தமிழ்நாட்டின் இரு முக்கிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட கூட்டணியை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க முதல்வர் ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை ‘ஒன்-டூ-ஒன்’ சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்-டூ-ஒன்’ சந்திக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் இன்று சங்கரன்கோவில், நெல்லை தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் திமுக கட்டாயம் வெற்றி பெற வேண்டும். திமுக தோற்றால் அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
