ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்புட்லி பகுதியைச் சேர்ந்த அமித் சேரா என்பது ஒரு சாதாரண காய்கறி வியாபாரி. இவர், சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றபோது, அங்கு தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெறும் லாட்டரி ரூ.11 கோடி பம்பர் பரிசு விளம்பரத்தை அறிந்தார்.
ஆனால் லாட்டரி சீட்டு வாங்க தேவையான பணம் கைகளில் இல்லாததால், அவர் நண்பர் முகேஷ் உமாரின் உதவியை நாடி கடனாக அந்த பணத்தை பெற்றுக் கொண்டு, ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கினார். கடந்த 31-ம் தேதி நடந்த பரிசு குலுக்கலில், அந்த சீட்டுக்கு ரூ.11 கோடி பரிசு வென்று அமித் மிகுந்த மகிழ்ச்சியில் தவிக்கிறார்.
லாட்டரி வாங்க பணம் கொடுத்து உதவிய தனது நண்பர் முகேஷுக்கு இந்த பரிசில் ரூ.1 கோடியை வழங்குவதாக தெரிவித்தார்.
