இன்றைய இணைய உலகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பெரும் தாக்கம் கொண்டுள்ளது. ஒபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, எக்ஸின் குரோக், கூகுளின் ஜெமினி போன்ற பல ஏஐ தளங்கள் சந்தையில் உள்ளன.
சாட்ஜிபிடி (ஏஐ) தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில் ChatGPT யிடம் சில விஷயங்களை பகிரக்கூடாது என்றும், பகிரப்பட்ட தகவல்கள் வெளியேறினால் நாங்கள் பொறுப்பில்லை என்றும் ChatGPT அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கீழ்க்கண்ட விஷயங்கள் பகிரக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
- கிரெடிட் கார்டு விபரங்கள்
- வங்கி விவரங்கள்
- வீட்டு முகவரி
- போன் எண்கள்
- பாஸ்வேர்டுகள்
- மருத்துவ விவரங்கள்
- மருந்து சீட்டுக்கள்
- சட்ட பிரச்சனைகள்
- வழக்கு விவரங்கள்
- குடும்ப, உறவுகளின் தனிப்பட்ட பிரச்சனைகள்
- பணி மற்றும் வர்த்தக ரகசியங்கள்
- வாடிக்கையாளர்கள், பணியாளர்களின் ரகசிய தகவல்கள்
- சட்டவிரோத செயல்களின் வழிமுறைகள்
- பிறர் தனிப்பட்ட விவரங்கள்
இவை வெளியே பகிரப்படும் போது பல சிக்கல்கள் எழும் வாய்ப்பு உள்ளது. அதனால், தனிப்பட்ட தகவல்களை சாட்ஜிபிடியில் கூட பகிர வேண்டாம் என்று தெளிவாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
