தமிழ்நாட்டில் நாளை (07.11.2025) வெள்ளிக்கிழமை அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்.
சென்னை
திருமுடிவாக்கம் பகுதி சிட்கோ 6வது, 8வது தெரு, மெயின் ரோடு மற்றும் லேன், வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர், கலைமகள் நகர், சாய்பாபா லேன், கற்பகம் நகர், 400 அடி சாலை பார்க்கிங் யார்டு பகுதி, ஆசிரமம் அவென்யூ. மேலும், அம்பத்தூர்: பழனியப்பா, புதூர், ஏ.கே.அம்மன், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், செல்லப்பம்பாளையம், பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம் ஆகிய இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
உடுமலை காந்தி நகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டன் ஆகிய பகுதிகள்.
சேலம் மாவட்டத்தில் ஆடையூர், பக்கநாடு, குண்டத்துமேடு, கல்லுரல்காடு, கன்னியம்பட்டி, ஒட்டப்பட்டி, இருப்பள்ளி, ஒருவப்பட்டி, செட்டிமாங்குருச்சி ஆகிய இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்
காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
