மருத்துவ செலவு என்றாலே பலருக்கும் ஒரு வித பதற்றம் தொற்றிகொள்கிறது. சாதாரண காய்ச்சல் கூட சிலருக்கு பெரிய பொருளாதார சுமையாகி விடுகிறது. இதை மாற்றும் முயற்சியாகவே “ஜெனரிக் மருந்துகள்” வந்துள்ளன.
Branded மருந்துகள் போலவே இதிலும் அதே செயலில் உள்ள மூலப்பொருள் இருக்கும். வேறுபாடு என்ன என்றால் விலை! branded மருந்துகள் packaging, விளம்பரம், பெயர் என பல காரணங்களால் விலை உயர்ந்திருக்கும். ஆனால் ஜெனரிக் மருந்துகள் அதே விளைவுடன், குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ஆனால் வாங்கும் போது சில விஷயங்களை கவனிப்பது அவசியம். அரசு அங்கீகாரம் பெற்ற மருந்தகம்தான் என்பதை உறுதி செய்யணும். ஜனஔஷதி (Jan Aushadhi) மையங்கள் இதற்கான சிறந்த வழி. மருந்து லேபிள் பார்த்து தயாரிப்பு, காலாவதி தேதி, நிறுவன பெயர் ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும்.
முக்கியமாக, மருத்துவரின் ஆலோசனைக்கு பின் மட்டுமே மருந்து பயன்படுத்த வேண்டும். நம்மை காப்பாற்ற வந்த ஜெனரிக் மருந்துகள், தவறாக உட்க்கொள்ளப்பட்டால் அதுவே நம்மை பாதிக்கலாம்.
விழிப்புணர்வு இருந்தால், நம்பிக்கை பெருகும். ஜெனரிக் மருந்துகள் சரியாக பயன்படுத்தினால், அது பல குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கக் கூடியது தான்.
