கடந்த 1991-ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘குணா’.சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 34 வருடங்கள் கடந்த பின்னரும் படத்தையும், அதன் பாடல்களையும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் கொண்டாடிவருகின்றனர். கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவான ‘குணா’ திரைப்படம் நவம்பர் 5, 1991 அன்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. தற்போது இந்த திரைப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மேலும்,’குணா’திரைப்படத்தை போலவே, மணிரத்னம் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபனா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்த ‘தளபதி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 1991 தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதியன்று வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்த்தின் தோற்றம், ஹேர்ஸ்டைல், அவரது நடிப்பு என அனைத்துமே வேறு கோணத்தில் இருத்தல் ரசிகர்களை அதிகம் கவரும் வண்ணத்தில் அமைந்துள்ளது.
