Tuesday, January 27, 2026

“நான் DNA பரிசோதனைக்கு தயார்” ஜாய் கிரிஸில்டா அதிரடி

அண்மையில் இவர்கள் தான்ப்பா எங்கு பார்த்தாலும் என்ற அளவுக்கு, பரவலாக பேசப்பட்டு வருபவர்கள் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா. அதாவது, மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து அனைத்தையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இதனால், நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என நியாயம் கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார் .

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில், ஜாய் கிரிசில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

கடந்த ஆக்டோபர் 15 விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என ரங்கராஜிக்கு மகளீர் ஆணையம் சம்மன் வழங்கியிருந்த நிலையில் ரங்கராஜ் முதல் மனைவியுடன் ஆஜராகியிருந்தார்.
ஆனால், இதற்கிடையில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை புகைப்படத்துடன் அறிவித்தார்.

இந்த நிலையில், தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் அவ்வாறு எந்த ஒப்புதலையும் தான் கொடுக்கவில்லை என்று தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது இணையத்ததில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஜாய் கிரிஸில்டா DNA பரிசோதனைக்கு நான் தயார் என்று பேசுருக்கிறார். மேலும், குழந்தை என்னுடையது என நிரூபணமானால் வாழ்நாள் முழுவதும் குழந்தையை பராமரித்து கொள்ள தயார் என கூறினார். மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மிகுந்த மனவலியை கொடுக்கின்றனர். குழந்தை என்ஐசியூ-வில் உள்ள நிலையில் இதுபோன்ற அறிக்கை தேவையா? மாதம்பட்டி ரங்கராஜூக்கு மனசாட்சி இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

Latest News