திருவொற்றியூர் சேர்ந்த கொலை முயற்சி, வழிபறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி லோகேஷ் இவர் தந்தை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக லோகேஷ் வந்தபோது திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கமல் ராஜ், ஆனந்தன், தீபக் ஆகிய மூன்று பேரும் லோகேஷ் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய தேரடி மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை பொது மக்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியது. சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் லோகேஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறிந்து தேடி வந்தனர். ஆனால் குற்றவாளிகள் காவல் நிலையத்திலேயே வந்து சரணடைந்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்
கொலைக்கான காரணம் குறித்து குற்றவாளிடம் போலீசார் விசாரித்த போது சில ஆண்டுகளுக்கு முன்பு லோகேஷ் மதன்ராஜ் என்பவனை கத்தியால் குத்தியதாகவும் அதிலிருந்து மதன்ராஜ்-க்கும் முன்விரதம் இருந்தது கொலையில் முடிந்தது என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்
பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய இடத்தில் நடைபெற்ற பயங்கர கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது மேலும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
